சிக்கன் சான்ட்விச் (சுலப முறை) | Very Simple Chicken Sandwich recipe

119

இது மிக சுலபமாக செய்யக்கூடிய சிக்கன் சான்ட்விச். குடை மிளகாய், சிக்கன் வைத்து நான் இதை தயாரித்துளேன். அனால், நீங்கள் மஷ்ரும் வைத்து கூட இதே உணவை தயாரிக்கலாம்.

இந்த ரெசிபியை பிரவுன் பிரட் வைத்து செய்வதால் ஓரளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள்  – 10

குடை மிளகாய்  – 1

சிக்கன் – 250 கிராம் 

பட்டர் – 3 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தேவைக்கேற்ப சீஸ்

தேவைக்கேற்ப சாஸ்

சில்லி பவுடர்  – 1 டீ ஸ்பூன்

பெப்பர் பவுடர்  – 1 டீ ஸ்பூன்

தேவைக்கேற்ப சால்ட்

செய்முறை:

1. ஒரு கடாயை சூடு செய்து அதில் ஒலிவ் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

 2.அதில் குடை மிளகாய் மற்றும் சிக்கன் துண்டுகளை வறுத்து கொள்ளுங்கள். சிக்கனை நான் தட்டையான துண்டுகளாக வெட்டி இருப்பதால் சீக்கிரம் வெந்து விடும்.

3.இதனுடன் சில்லி பவுடர், சால்ட், பெப்பர் பவுடர் சேர்த்து வதக்கி சிக்கன் வெந்ததும் இந்த கலவையை ஆற விடுங்கள்.

4.பிரட் துண்டுகளில் வெளிப்புறத்தில் வெண்ணெய் தடவி நடுவில் குடை மிளகாய், சிக்கன் கலவை மற்றும் சீஸ் சேர்த்து நிரப்புங்கள். உங்களிடம் எதாவது சாஸ் (தக்காளி, மஸ்டர்டு, சீஸ்) இருந்தால் அதையும் சிறிது சேர்த்து கொள்ளுங்கள்.

5.பின்னர், பட்டர் தடவிய பாகத்தை வெண்ணெய் சூடு செய்யப்பட்ட தவாவில் இரண்டு புறமும் பிரவுன் ஆகும் வரை வேக விட்டு எடுங்கள்.

Like
Close
Yummlyyum © Copyright 2021. All rights reserved.
Close