மீன் கட்லெட் | Fish Cutlet Recipe | Fish Recipe

125

நான் உறுதியாக சொல்வேன். இது போன்ற மீன் கட்லெட் நீங்கள் எங்கேயும் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள்.. நானும் இதே வார்த்தைகளை சொன்னேன் முதலில் சுவைத்த பொழுது. இது உங்களுக்காக எனது அத்தையின் சமையறையில் இருந்து. மீன் சமைப்பதில் அவர்கள் உண்மையிலேயே திறமைசாலி. எல்லா உணவுகளையும் அவர்கள் நன்றாக சமைத்தாலும், மீன், நண்டு, மட்டன் ரொம்ப நேர்த்தியாக சமைப்பார்கள்.

சமையல் அறையில் நிச்சயம் பொறுமை அவசியம். இதை நான் அவர்களிடம் இருந்து கற்று கொண்டேன். இந்த மீன் கட்லெட் கலவையை(முட்டை சேர்ப்பதற்கு முன்) நீங்கள் பிரிட்ஜ்ல் (freezer ) வைத்து தேவைப்படும் பொழுது முட்டை சேர்த்து கட்லெட் செய்து கொள்ளலாம். இந்த கட்லெட் செய்ய நீங்கள் அயில மீன், வாளை மீன் பயன்படுத்தலாம். நான் இந்த செய்முறைக்கு முள் குறைவாக உள்ள ஜிலேபி மீன் துண்டுகளை பயன்படுத்தி உள்ளேன்.

நீங்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டிய ரெசிபி இது.  குழந்தைகளும் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

* மீன் துண்டுகள்  – 500 கிராம்

* பெருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 3 பொடியாக  நறுக்கியது

* கறிவேப்பிலை – நறுக்கியது

* மிளகாய் தூள் – 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் 

* மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

* தேவைக்கேற்ப உப்பு

* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* தேவைக்கேற்ப எண்ணெய்

* நீர் – 1/4 முதல் 1/2 கப்

செய்முறை:

1. முதலில் ஒரு கடாயில் மீன் துண்டுகளை எடுத்து மஞ்சள் தூள், உப்பு, வத்தல் தூள் சேர்த்து 1/2 கப்பிற்கும் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு இரண்டு பக்கங்களும் வேக 4 நிமிடங்கள் விடவும்.

2.கடாயை திறக்கும் பொழுது நிறைய தண்ணீர் இருந்தால் நன்கு கொதிக்க வைத்து வத்த விடவும். இல்லையெனில் இந்த தண்ணீரை நீங்கள் மீன் குழம்பு தயாரிக்கும் பொழுது கூட உபயோகிக்கலாம்

3.பின்னர், ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் இளஞ்சிவப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

4.மீன் துண்டுகளை நன்கு முள் நீக்கி மசித்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம் இளஞ்சிவப்பு நிறமாக மாறியதும், முள் நீக்கிய மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். உப்பு, காரம் தேவையெனில் சேர்த்து கொள்ளுங்கள்.

5.இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவிலான தேங்காய் துருவலை சேர்த்து கொள்ளுங்கள்.

6.ஒரு முட்டையை உடைத்து நன்கு அடித்து மீன் வெங்காய கலவையில் ஊற்றவும். பின்னர், இதை நன்கு கலந்து சிறிது ஆற விடுங்கள்.

6.கட்லெட் செய்யும் முன், படத்தில் காட்டியவாறு மீன் கலவையை தட்டி கொள்ளுங்கள். நன்றாக இறுக்கமாக தட்டி கொள்ளுங்கள். இல்லையெனில் எண்ணையில் போட்டவுடன் பிரிந்து வந்து விடும்

7.பின்னர் ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தட்டிய கட்லெட் கலவையை இட்டு இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுங்கள்.

8.இந்த செட் வெந்ததும் இதை தோசை கல்லின் ஓரங்களுக்கு நகர்த்தி எண்ணெய் வடிய விடுங்கள். இதே முறையில் அடுத்த செட் பொரித்து எடுங்கள். இப்பொழுது சுவையான மீன் கட்லெட் தயார்.

Like
Close
Yummlyyum © Copyright 2021. All rights reserved.
Close