மீன் பான் கேக் | Fish Pan Cake Recipe

129

பெயர் கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும் இது சுலபமாக செய்யக்கூடிய ஸ்டார்டர். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் அல்லது மீல் ஆக கூட கொடுக்கலாம். நான் இந்த ரெசிபி செய்ய முள் நீக்கிய fillet உபயோகித்துளேன். நீங்கள் முள் குறைவாக உள்ள எந்த மீன் துண்டுகளையும் இதற்கு பயன்படுத்தலாம்.

மீன் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது. அதில் உள்ள எண்ணெய் நம் இதயத்திற்கும், நோய் எதுர்ப்பாற்றலை தரக்கூடியதாக இருக்கிறது, இந்த ரெசிபிக்கு வெகு குறைவான எண்ணெய் போதுமானது. 

இதற்கு சில்லி சாஸ், சில்லி டொமட்டோ சாஸ் நல்ல பொருத்தமாக இருக்கும். 

தேவையான பொருட்கள் :

ஃபிஷ் ஃபில்லட் அல்லது முள் குறைவாக உள்ள மீன் துண்டுகள் – 200 கிராம்

மைதா மாவு – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

தேவைக்கேற்ப உப்பு

தேவைக்கேற்ப எண்ணெய்

மிளகு தூள் – 2 டேபிள் ஸ்பூன்

முட்டை – 1

வெங்காயத்தாள்  – கொஞ்சம்

சில்லி flakes  – 1 டீ ஸ்பூன்

செய்முறை :

1.மீன் துண்டுகளை மஞ்சள் தூள்,  உப்பு,நறுக்கிய பூண்டு, மிளகு தூள் சேர்த்து சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். உங்களுக்கு காரம்  வேண்டுமெனில் வத்தல் தூள் சேர்த்து கொள்ளலாம்.

3.ஒரு நான் ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடு செய்யுங்கள்.

4.எண்ணெய்  சூடான பின், மீன் துண்டுகளை மைதா மாவில் நன்கு பிரட்டி எடுத்து, முட்டை கலவையில் தோய்த்து பின் சூடான எண்ணையில் போடவும்.

5.அடுத்த பக்கத்தில் வெங்காயத்தாள் மற்றும் சில்லி flakes சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து சூடாக பரிமாறுங்கள்.

Like
Close
Yummlyyum © Copyright 2021. All rights reserved.
Close