Tasty yet Simple Chicken Roll | மிக சுவையான சிக்கன் ரோல்

126

சிக்கன் ரோல் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் கொள்ளை பிரியம். கொல்கத்தா ஸ்பெஷல் காத்தி ரோல், அரேபியன் ஸ்பெஷல் ஷவர்மா ரோல் என்னவாக இருக்கட்டும், அதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இதுவும் அது போன்ற ஒரு டேஸ்ட்டி ரோல், ஆனால் சற்று சுலபமாக செய்யக்கூடியது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து 30 நிமிடங்களுக்கு குறைவாகவே இதனை தயாரித்து கொள்ளலாம்.

வீட்டில் தயாரிக்கும் பொழுது நமக்கு தகுந்த மூல பொருட்களை வைத்து எளிமையான முறையில், ஆரோக்கியமான வகையில் உணவுகளை தயாரித்து குடும்பத்திற்கு வழங்கலாம். இந்த ரோலில் நான் கடையில் வாங்கிய tortilla wrap உபயோகித்துளேன். இதே ரெசிபியை சப்பாத்தி வைத்தும் செய்யலாம். அதுவும் ருசியாக தான் இருக்கும்.மயோனைஸ் வேண்டாம் என்றால் hung curd சேர்த்து கொள்ளுங்கள். Stuffing ஐடியா இதில் இருந்து எடுத்து வேறு உங்களுக்கு பிரியமான காய்கறிகளை வைத்தும் ரோல் செய்யலாம். உதாரணத்திற்கு, குடை மிளகாய், மஷ்ரூம், ஸ்வீட் கார்ன், lettuce என உங்களுக்கு பிரியமான stuffing செய்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

1.எலும்பு நீக்கிய சிக்கன் – 500gm 

2. பெரி பெரி மசாலா – 3 டேபிள் ஸ்பூன் 

3.உப்பு தேவைக்கேற்ப 

4.பிரட் தூள் – சிறிது 

5.தயிர் – 4 டேபிள் ஸ்பூன் 

6.Tortilla / சப்பாத்தி – 6

7.முட்டைகோஸ் சிறிதாக நறுக்கியது – தேவைக்கேற்ப 

8.வெங்காயம் கீறியது – தேவைக்கேற்ப 

9. மயோனைஸ்  – தேவைக்கேற்ப 

10. சில்லி சாஸ் – தேவைக்கேற்ப 

11. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

1. சிக்கன் துண்டுகளில் பெரி பெரி மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, தயிர் சேர்த்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

பெரி பெரி மசாலா இல்லை எனில் சில்லி பவுடர், மிளகு பொடி , ஜீரக பொடி, மல்லி தூள் சிறிது சேர்த்து கொள்ளுங்கள்.

2.சிக்கன் நன்கு ஊறியதும் தேவைக்கேற்ப பிரட் crumps சேர்த்து கொள்ளுங்கள்.பின்னர் சிக்கன் துண்டுகளை சிறிது எண்ணெய் சூடேற்றப்பட்ட ஒரு நான் ஸ்டிக் அல்லது இரும்பு கடாயில் பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.

3.Tortilla சூடு செய்து, அதில் மயோனைஸ் சேர்த்து கொள்ளுங்கள். இல்லெயெனில் hung curd கூட சேர்த்து கொள்ளலாம்.

Like
Close
Yummlyyum © Copyright 2021. All rights reserved.
Close